பயிர்களில் மகசூல் இழப்பை ஏற்படுத்தும் களையை இயற்கை
முறையில் கட்டுப்படுத்தலாம் விவசாயிகளுக்கு
ஆலோசனை.
பயிர்களில் 40 முதல் 45சதவீதம் அளவிற்கு மகசூல் இழப்பை தரும்களையை இயற்கை முறையில் கட்டுப்படுத்தலாம் என ஈஷா மண் காப்போம் அமைப்பினர்தெரிவித்துள்ளனர்.
ஒரு தாவரம் வளர சூரிய ஒளி என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்று. சூரிய ஒளி இல்லாவிட்டால், தாவரம் வளர்வது என்பது கடினமானது. இது புற்களுக் கும் பொருந்தும். அதற்குமூடாக்கு முறையை பின்பற்றலாம். விதை பரவு தலை கட்டுப்படுத்துவது.களை வளர ஆரம்பிக்கும்
பொழதே,களைச்செடிகளில் இருந்து பூ வருவதற்கு முன்பே, அப்பறப்படுத்தி விட்டால் களைஅதிகமாக பரவுதலை
கட்டுப்படுத்த முடியும்.கட்டுப்பாடு முறை செய்யதவறும் பட்சத்தில், களைச்செடியில் உள்ளபூக்கள் அனைத்தும் வயலில் பரவி விடும்.அப்படி இருக்கும் பொழுது தண்ணீர் விட்டு,
கீழே விழந்த பூக்களில் இருந்து களைச்செடியைவளர விட்டு, பிறகு அப்புறப்படுத்தலாம்.
உறவிற்கு பின்பு செய்யவேண்டியது இந்த மண்வெப்பமூட்டல். நிலத்தைநெகிழி தாளை வைத்துமுழுவதுமாக மூடுதல்.
இப்படி செய்வதன் மூலம்சூரிய ஒளி நெகிழி மீது
பரவி மண்ணின் வெப்பத்தை அதிகரிக்கச்செய்யும். இந்த வெப்பத்தினால் நிலத்தில் இருக்கும் விதைகள் அனைத்தும் முளைப்புதிறன் குறைந்து மலட்டுத்தன்மை அடைந்து விடும்.
வயலில் ஆட்டுப்பட்டிஅடைப்பதை தான் கிளைபோடுதல் என்கிறோம். ஆட்டின் சிறுநீருக்கு களைச் செடிகளை வளர
விடாமல் தடுக்கக் கூடியஆற்றல் உண்டு. அதுமட்டுமில்லாமல் இப்படிகிடை போடுவதன் மூலம்நிலத்தின் நைட்ரஜன் சக்தியையும் அதிக படுத்தலாம். இது மாதிரியான எளிய முறை
களை பின்பற்றி நமக்குவருமான இழப்பை தரக்
கூடிய இந்த களையைகட்டுப்படுத்தலாம் எனஈஷா மண் காப்போம் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.