ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்
நேதாஜி கல்லூரியில் தாய்ப்பால் வார விழா
திருவாரூர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கலை அறிவியல் கல்லூரியில் இன்று உலக தாய்ப்பால் வாரத் தினத்தை முன்னிட்டு தாய்ப்பாலும் அதன் தனித்தன்மையும் பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
விழிப்புணர்வை இன்னர்வீல் சங்கம் திருவாரூர் (கிளை) அதிகாரிகள் நேதாஜி கல்லூரியுடன் இணைந்து ,கல்லூரியின் முதல்வர் முனைவர் வே. சிவகுநாதன் வரவேற்புரை வழங்கினார்.கல்லூரி இயக்குனர் மற்றும் மகரிஷி வித்யா மந்திர சிபிஎஸ்இ பள்ளியின் தாளாளர் த.விஜயசுந்தரம் அவர்கள் தாய்ப்பாலும் அதன் தன்மையையும் பற்றியும் சிறப்புரையாற்றினார்.
இன்னர்வீல் சங்கம் அதிகாரிகள் மாலதி செல்வம், செயலாளர் சக்தி கண்ணு ஜோதி, பொருளாளர் சூரியகலா சந்திரசேகர், துணைத்தலைவி பவானி பாண்டியன் முன்னாள் தலைவிகள் விஜயகுமாரி விவேகானந்தன்.சிவசங்கரி அகிலன் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.
சிறப்பு விருந்தினராக டாக்டர் ஜெயக்குமாரி குழந்தை நல மருத்துவர்,அரசு மருத்துவமனை நீடாமங்கலம் தாய்ப்பாலும் அதன் தன்மையும் பற்றி கூறினார்கள்.
மேலும் கல்வி குழுமத்தின் தாளாளர் செயலர் முதன்மை செயல் அலுவலர் முனைவர் நிர்மலா ஆனந்த் ஆகியோர் தமது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்கள் மாணவ மாணவிகளுக்கு ஜூன் 28 அன்று கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டது போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்குபரிசுகள் வழங்கப்பட்டது . மாணவ மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்