திருப்பத்தூரில் பாமக சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம். மாநில கொள்கை விளக்க அணி செயலாளர் பங்கேற்பு.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று திருப்பத்தூர் மேற்கு மாவட்ட பாமக சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் ஏ.பி.சிவா தலைமையில் நடைபெற்றது.
மாநில வன்னியர் சங்க செயலாளர் ராஜா, முன்னாள் எம்எல்ஏ நடராஜன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பொன்னுசாமி, கிருபாகரன், குட்டிமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதற்கு சிறப்பு அழைப்பாளராக மாநில கொள்கை விளக்க அணி செயலாளர் செல்வக்குமார் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
அப்போது அவர் பேசுகையில்
திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியை கைப்பற்றும் வகையில் பாமக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும், ஒவ்வொரு கிராமங்களில் பூத் கமிட்டி அமைத்து அதற்கு பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும் என பேசினார்.
இதில் ஒன்றிய செயலாளர்கள் சீனிவாசன், கோவிந்தசாமி, சதிஷ் குமார், கோவிந்தராஜ், அசோக்குமார், சிவசங்கரன் மற்றும் ஒன்றிய தலைவர்கள் அன்பழகன்,சிவசங்கர் மற்றும் பாமக நிர்வாகிகள் தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்..