அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீது கடந்த 2019 ம் பாராளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் நடந்த பிரச்சாரத்தின் போது அவதூறாக பேசினார் என்று குஜராத் கீழமை நீதிமன்றத்தில் பாஜக தூண்டுதலின் பெயரால் தொடரபட்ட வழக்கில் ராகுல்காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு உடனே அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது
இதனை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது பின்னர் குஜராத் உயர்நீதிமன்றம் இரண்டு ஆண்டு தண்டனையை உறுதி செய்தது அதனை தொடர்ந்து ராகுல் காந்தி டெல்லி உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார், அந்த வழக்கினை விசாரித்த உச்சநீதிமன்றம் ராகுல்காந்தியின் தண்டனைக்கு தடை விதித்து தீர்ப்பு வழங்கியது
அதனை கொண்டாடும் விதமாக ஆலங்குளம் காங்கிரஸ் கட்சியின் நகர மற்றும் வட்டார நிர்வாகிகள் கொண்டாட்டம்
நடைபெற்றது, வில்லியம் தாமஸ் நகர தலைவர் காங்கிரஸ் தலைமையில்,வட்டார தலைவர் ரூபன் தேவதாஸ் முன்னிலையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராமசுப்பு,கலை இலக்கிய அணி மாநில துணை தலைவர்,
ஆலடி சங்கரையா ஆகியோர்சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டுபெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தும் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது,
நிகழ்ச்சியில்ஆர்.ஜி.பி ஆர்.எஸ்தொகுதி தலைவர்ஏசுராஜா,
எம்எஸ் அருணாச்சலம்,ராஜ்குமார், ஜோசப், பொன்னுத்துரை, பொன்னுச்சாமி,கூட்டணி கட்சி திமுக அண்ணாவிகாசிலிங்கம், ஆதி, உட்பட ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இறுதியில் கலை இலக்கிய அணி ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி தலைவர்லிவிங்ஸ்டன் விமல், நன்றி கூறினார்