திருநெல்வேலி மாவட்டம்அருள்மிகு சொரிமுத்துயனார் திருகோவில்ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு
கோவிலுக்கு வரும் பக்கதர்களுக்கு வனத்துறை கட்டுப்பாடு குறித்து நல்லூர் சி.எஸ்.ஐ.ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி, மற்றும் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம்
வனத்துறைஇணைந்து நடத்திய விழிப்புணர்வு மிதிவண்டி பேரணிநடைபெற்றது.
ஆலங்குளம் காவல் ஆய்வாளர் சாகுல் ஹமீது தலைமை ஏற்று விழிப்புணர்வு பேரணியினை தொடங்கி வைத்தார்.
கல்லூரி தாளாளர் ஜேசு ஜெகன்,கல்லூரி முதல்வர் முனைவர் வில்சன்,ஆலங்குளம் உதவி காவல் ஆய்வாளர் மகேந்திரன், வனசரகர்கள் பாபநாசம், சக்திவேல்கடையம் கருணா மூர்த்தி, அம்பை நித்யா, முண்டந்துறை கல்யாணி,வனவர் பிரபாகர், ஆகியோர் முன்னிலை வகித்தனர்,இப்பேரணி நல்லூர் , ஆலடிப்பட்டி, கீழ பட்டமுடையபுரம், குறிப்பன்குளம், குருவன் கோட்டை வழியாக ஆலங்குளம், பேரூராட்சி அலுவலகம் வந்தடைந்தது.
மிதிவண்டி விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிறப்பு நிலை பேரூராட்சி சார்பில் தலைவர் சுதா மேகான்லால் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டு
குளிர் பானம் வழங்கப்பட்டது.
அதனையடுத்து அங்கிருந்து புறப்பட்டு ஆலங்குளம் பேரூந்து நிலையம் வந்தடைந்துஅங்குள்ள பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது .
விழிப்புணர்வு பேரணியில் கல்லூரி ரத்த தான கழக ஒருங்கிணைப்பாளர் ஜூலியன்ஸ் ராஜாசிங், நாட்டு
நல பணி திட்ட அலுவலர்கள் ஜெய டேவிசன் இம்மானுவேல், எஸ். ஜோகன்னா,வனகாப்பாளர்கள் பெருமாள், மரியராஜ், ரமேஷ், ராஜசுப்பிரியா, பெனாசீர், சங்கீதா, அப்தூல் கபூர், ஆறுமுகநயினார்,பூ உலகை காப்போம் ஆலோசகர் எம்.எஸ் இளங்கோ, பசுமை இயக்கம் நிர்வாகி சாமுவேல் பிரபு, மற்றும்
வேட்டை தடுப்பு காவலர்கள், சி.எஸ் ஐஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி நாட்டு நல பணி திட்டம், ரத்ததான கழக மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.