பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சினேகம் கிங்ஸ் லயன்ஸ் சங்கம் சார்பாக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டில் பாலூட்டும் தாய்மார்களை ஒருங்கிணைத்து “உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வு நிகழ்வு சினேகம் கிங்ஸ் லயன்ஸ் சங்க தலைவர் கே.குடியரசு தலைமையில் நடைபெற்றது.
இதில் லயன்ஸ் சங்க சாசன தலைவர் பொறியாளர்
கே.சிவகுமார், செயலாளர் பி. ரமேஷ், பொருளாளர் எம்.குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர் மண்டல தலைவர் எம்ஜெஎப் பி.இராஜேந்திரன், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் எம்.மோகன், கீதா, கவிதா ஆகியோர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்
மருத்துவமனை செவிலியர்கள் குமாரவல்லி, கமலாதேவி மற்றும் உதவி செவிலியர் சரஸ்வதி ஆகியோர்கள் கலந்துகொண்டு பாலூட்டும் தாய்மார்களை ஒருங்கிணைத்து நோக்கத்தின் விழிப்புணர்வு கைப்பிரதிகளை அனைவரிடமும் கொடுத்தனர். 01.08.2023 முதல் 07.08. 2023 நாட்கள் வரை உலக தாய்ப்பால் வாரம் விழிப்புணர்வு நிகழ்ச்சி உலகம் முழுவதும் நடைபெற்று வருகிறது என்றும் தாய்ப்பால் ஊட்டலை சாத்தியமாக்குவோம்! பணிபுரியும் தாயின் வாழ்வில் மாறுதலை உருவாக்குவோம்!! என்ற உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தலின்படி, பிறந்த குழந்தை அறிவாளியாகவும், நலமாகவும், பாசத்துடன் வளர அனைவரும் குறைந்தபட்சம் இரண்டு வருடங்கள் அல்லது அதற்கு மேலும் தாய்ப்பாலை கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்
அதில் ஆறு மாதங்கள் (180 நாட்கள்) தாய்ப்பால் மட்டுமே! தர வேண்டும் ஆறு மாதம் முடிந்து, ஏழாம் மாதத்தில் இருந்து தாய்ப்பாலுடன் இணை உணவுகளையும் (வீட்டிலேயே செய்யக்கூடிய இணை உணவுகளையும்) சேர்த்து குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் இணை உணவு பழகிய பின்பும் தாய்ப்பாலை தொடர்ந்து தரவேண்டும் என்றும் தெரிவித்தனர்
இதில் சிறப்பு அழைப்பாளர் மண்டல தலைவர்
பி.இராஜேந்திரன், ஆகியோர்கள் விளக்க உரையாற்றினார்கள். நிகழ்ச்சியை தொடர்ந்து சுமார் 200 தாய்மார்களுக்கு பயன்படுத்தக்கூடிய உபகரணங்கள் உள்ளடக்கிய தொகுப்பு பைகள் தாய்மார்கள் அனைவருக்கும் சிறப்பு அழைப்பாளர்கள் மூலம் வழங்கினார்கள். நிகழ்ச்சியில் சினேகம் கிங்ஸ் லயன்ஸ் சங்கத்தினர் யோகானந்த், ஆசிரியர் கலியராஜ் கண்மணி கவரிங் பி.ராஜ்குமார், மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் நிகழ்வின் முடிவில் சங்கத்தின் பொருளாளர்
எம்.குமார் நன்றி கூறினார்.