கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த புங்கம்பட்டி கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் உள்ளன. இக்கிராமத்தில் ஓவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் குடும்பத்திற்கு ஒருவர் என முருக கடவுளுக்கு காவடி சுமந்து திருத்தனி செல்வது வழக்கம்.

கொரோனா காரணமாக காவடி எடுத்து செல்வது தடைப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு மீண்டும் கோவிலுக்கு செல்ல துவக்கியுள்ளனர்.
அந்தவகையில் 250ற்கும் மேற்பட்ட கிராம மக்கள் தெண்பெண்னை ஆற்றில் குளித்துவிட்டு, புங்கம்பட்டி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் தங்கி இரவு பேருந்து மூலம் திருத்தனி செல்கின்றனர்.
ஆற்றில் குளித்து விட்டு வரும் பக்தர்கள் பெண்களை தாண்டி செல்வதன் மூலம் குடும்பம் துன்பத்திலிருந்து விடுபடும் என்பதால் கிராம பெண்கள் பலர் கீழே படுத்து பக்தர்களின் ஆசி பெற்றனர். கிராமம் முழுவதும் திருத்தனி கோவிலுக்கு செல்வதால், புங்கம்பட்டி கிராமம் விழாக்கோலம் பூண்டுள்ளது.