தினேஷ் குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம்
திருப்பத்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் பங்கேற்பு ..

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி திருமால் பகுதியில் உள்ள திருப்பத்தூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் இன்று ஆலோசனை கூட்டம் திருப்பத்தூர் தெற்கு மாவட்ட செயலாளர் வெற்றி கொண்டான் தலைமையில் நடைபெற்றது.
திருப்பத்தூர் நகர செயலாளர் ஆனந்தன், ஒன்றிய செயலாளர்கள் அண்ணாமலை, ரமேஷ், விமல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் வேலூர் மற்றும் திருப்பத்தூர் மண்டல செயலாளர் சுபாஷ் சந்திர போஸ் கலந்து கொண்டார். பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்களின் அக்கா பானுமதி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்