திருவள்ளூர்
அரசூர் ஊராட்சி எல்லையம்மன் ஆலையம் 14ஆம் ஆண்டு திமிதி திரு விழாவில் 100க்கு மேற்பட் டோர் திமிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன் னேரி தாலுக்கா மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது அரசூர் ஊராட்சி இந்த ஊராட்சிக்குட்பட் டது அரசூர் தென் கிராமம் இந்த பகுதியில் புகழ்பெற்ற பழமை வாய்ந்த ஸ்ரீ எல்லையம்மன் ஆலையம் உள்ளது இந்த ஆலைய த்தின் 14ஆம் ஆண்டு தீமிதி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
இதனையடுத்து அரசூர் தென் கிராமம் பகுதியை சேர்ந்த 100க்கு மேற்பட்ட ஆண்கள் சிறுவர்கள் என பலர் கடந்த 10நாட்களுக்கு முன்பு காப்பு கட்டி விரதமிருந்து திமிதித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.
இந் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆலைய நிர்வாகிகள் மற்றும் கிராமத்தினர் செய்திருந்தனர் இத் தீமிதி விழாவில் சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த ஆயிரக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
இதில் சிறப்புஅழைப்பாளராக ஒன் றிய கவுன்சிலர் வெற்றி என்கின்ற ராஜேஷ், அரசூர் ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ஆறுமுகம், அரசூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாஸ்கர், வார்டு உறுப்பி னர் சுந்தரம்உள்ளிட்ட பலர் பங்கே ற்றனர்.