மன்னார்குடி அருகே வீட்டில் இருந்த சிலிண்டர் வெடித்து சிதறியதில் அருகில் இருந்த 6 வீடுகளுக்கு தீ பரவியது: ரூ 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி நாசம்…

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டத்திற்கு உட்பட்ட தருசுவேளி கிராமத்தில் வசித்து வருபவர் முருகையன். முருகையன் வீட்டிற்கு அருகாமையில் பழைய மூங்கில்கள் தீவைத்து கொளுத்தப்பட்டுவந்து நிலையில் அதில் இருந்து தீபொறி முருகையன் வீட்டு குடிசையில் விழுந்துள்ளது. அப்போது காற்று அதிகமாக வீச முருகையன் வீடு முழுவதும் தீ மலமலவென பரவியது.

அப்போது முருகையன் வீட்டில் இருந்த இரண்டு சிலிண்டர்கள் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் அருகில் இருந்த வீடுகளுக்கும் தீ பரவியது. இதில் மொத்தம் 6 வீடுகள் தீயில் முழுவதுமாக கருகி நாசமானது. சம்பவம் தொடர்பாக உடன் அங்குவந்த தீயணைப்பு துறையினர் தங்களது வாகனத்தில் இருந்து தண்ணீரை பீய்த்து அடித்து தீயை முற்றிலுமாக அனைத்து மேலும் தீ பரவாமல் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இந்த தீவிபத்தில் தங்க நகைகள், தொலைக்காட்சி பெட்டி, குளிர்சாதனபெட்டி முதலான மின்சாதன பொருட்கள் மற்றும் 2 புதிய இரண்டு சக்கர வாகனங்கள் என மொத்தம் சுமார் ரூ.5 லட்சம மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தன. இதுகுறித்து அங்கு வந்த மன்னார்குடி வருவாய் துறை அதிகாரிகள் சேதங்கள் குறித்து கணக்கிட்டு வருகின்றனர். மேலும் தீ விபத்து குறித்து மன்னார்குடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *