கோவை மாவட்ட கால்பந்து சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது..இதில் புதிய அஜித்குமார் லால் மற்றும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக,கோவை குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் மருது பாண்டியன் சிறப்பு கலந்து கொண்டார் .தேர்தல் அதிகாரியாக வக்கீல் விஜய் ஆனந்த்,ஜேசுதாஸ்,சேதுபதி உள்பட பலர்கலந்து கொண்டனர்.

கோவை மாவட்ட கால்பந்து சங்கத்தின் புதிய தலைவராக அஜித்குமார் லால்.செயலாளராக கிருஷ்ணமூர்த்தி,உதவி தலைவர்களாகசண்முகநாதன் ஆர்.வி. ராமசாமி உதவி செயலாளராக சந்திரகுமார் பொருளாளராக சீனிவாசன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர் அதேபோன்று நிர்வாக குழு உறுப்பினர்களாக சரவணன் செந்தில் பிரபு ஆனந்தன்செல்வ சிங் ரவிக்குமார்ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்

அதை தொடர்ந்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கோவை மாவட்ட கால்பந்து கழக தலைவர் அஜித்குமார் லால் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது பேசிய அவர், தற்போது நடந்த75 ஆவது பொதுக்குழு கூட்டத்தில் 16ஆபீஸ் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.கோவை மாவட்ட கால்பந்து கழகம் மற்றும் எல்லா கிளப் இணைந்தும்ஆண்களுக்கான கால்பந்து விளையாட்டு போட்டியை நடத்த உள்ளோம்.அதே போன்று பெண்களுக்கான கால்பந்து விளையாட்டு போட்டியை நடத்தவும் உள்ளோம்.

கோவை மாவட்டத்தில் கால்பந்து விளையாட்டு போட்டியை சர்வதேச அளவில் உயர்த்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் அதற்காக மத்திய மாநில அரசுகளின் உதவியைப் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்படும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *