கோவை மாவட்டம் வால்பாறையில் டாக்டர் கலைஞரின் 5 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வால்பாறை நகராட்சி அலுவலகம் முன்பு வைக்கப்பட்டிருந்த கலைஞரின் திருஉருவப்படத்திற்கு தி.மு.க சார்பில் ஆகஸ்ட் திங்கள் கிழமை காலை 10 அளவில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது
வால்பாறை நகர் மன்ற தலைவர் எஸ்.அழகு சுந்தரவள்ளி செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் திமுக நகர் மன்ற உறுப்பினர்கள், கட்சியின் மூத்த முன்னோடிகளும் திரளாகக் கலந்து கொண்டார்கள்