நாமக்கல்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு விவேகானந்தா
கலை மற்றும் அறிவியல் மகளிர; கல்லூரி (தன்னாட்சி) சார்பில்
தேசிய கைத்தறி தினக் கொண்டாட்டம் (07.08.2023) கொண்டாடப்பட்டது
விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர; கல்லூரியின் தமிழ் உயராய்வுத்துறை சார்பில் தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவிகள் நூற்புடவைகளை அணிந்து வந்து கைத்தறி தினத்தை நினைவுகூரும் விதமாக மரக்கட்டையினால் கைராட்டையினை உருவாக்கி நூல் நூற்றனர்.
அதன் தொடர்ச்சியாக தமிழ் உயராய்வுத்துறையின் மாணவிகள் அனைவரும் குமரமங்கலத்திலுள்ள கைத்தறிப் பட்டறைக்குச் சென்றனர். அங்கு கைத்தறியை இயக்கும் நபர்களைச் சந்தித்து உரையாற்றி அவர்களின் வேலையில் ஏற்படும் சிக்கல்களையும் கைத்தறி உபயோகத்தின் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் மாணவிகள் தெரிந்து கொண்டனர்.
மேலும் நூல் சுற்றும் ராட்டையின் பயன்பாடுகள் பற்றியும் அதை இயக்கும் முறையைப் பற்றியும் மாணவிகள் அறிந்து கொண்டனர்.
எதிர்காலத்தில் கைத்தறியினதால் தயாரிக்கப்படும் ஆடைகளுக்கே மிகுந்த முக்கியத்துவம் அளிப்பதற்கு மாணவிகள் உறுதி பூண்டனர்.
கைத்தறி நெசவாளர்களுக்கு அரசு பல சலுகைகள் செய்து அவர்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டுமென தங்களது விருப்பத்தைத் தெரிவித்தனர்.
இந்நிகழ்விற்கு விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லு}ரியின் முதல்வர் முனைவர் பி.பேபிஷகிலா தலைமை தாங்கினார்.
உடன் தமிழ் உயராய்வுத்துறைத் தலைவர் முனைவர் ம.கவிதா இருந்தார் இந்நிகழ்வை தமிழ் உயராய்வுத்துறையின் உதவிப் பேராசிரியர் க.நித்யா ஒருங்கிணைத்திருந்தார்