கோவை மாவட்டம் வால்பாறையில் உலக பழங்குடியினர் தின விழாவை முன்னிட்டு கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் ஆனைமலை பழங்குடியின மக்கள் நடத்தும் உலக பழங்குடியினர் தினம் நாளையும் வால்பாறையிலுள்ள நகராட்சி சமூக நலக்கூடத்தில் சிறப்பாக நடைபெறுகிறது
இதில் துவக்க நாளான இன்று பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா கலந்து கொண்டு சமுதாய உரிமைகளுக்கான சான்றுகளை வழங்கினார் மொத்தமுள்ள 18 பழங்குடியின கிராமங்களில் உள்ள சுமார் 14 கிராம மக்களுக்கு இதுவரை சமுதாய உரிமைச்சான்று வழங்கியுள்ளதாகவும் மீதமுள்ள 4 கிராம மக்களுக்கும் வழங்கி அனைவரின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்க்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்க் கொண்டு வருவதாகவும் உரையாற்றினார்
இந்நிகழ்ச்சியில் தனிவட்டாட்சியர் வெங்கடாசலம், வால்பாறை வட்டாட்சியர் அருள்முருகன் மற்றும் பழங்குடியின மக்களும் கலந்து கொண்டனர்