கீழவடகரை ஊர்புற நூலகத்தில் வாசகர் வட்டம் ஆலோசனைக் கூட்டம்
வாசகர் வட்ட தலைவர் மோகன் தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் வரும் சுதந்திர தினவிழா அன்று நூலகத்தில் கொடியேற்றுதல் மற்றும் தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா பிறந்த நாள்நூலக நண்பர்கள் திட்டம் துவக்க விழாநூலகதில் வந்து படிக்கும் பள்ளி மாணவ மாணவிகள் வாசகர்களுக்கு ஊக்கத் தொகை வழங்குவது
போன்ற நிகழ்சிகள் நூலக வளாகத்தில் நடத்துவது சம்மந்தமாக பேசப்பட்டது நூலகர் ராஜகோபால் அணைவரையும் வரவேற்று வரவேற்புரையாற்றினார்
இந்நிகழ்வில் வாசகர் வட்ட பொருளாளர்ஜெயராஜ் புரவலர்கள் முன்னாள் இராணுவ வீரர் ஜெயராமன் நாயுடு பொறியாளர் இராஜாமணி E.B. முருகன், மணி பூசாரி நகர வியாபாரிகள் சங்க தலைவர் V T S இராஜ் வேலு யுனைட்டேட் இன்சூரன்ஸ் அலுவலர் பால்ராஜ் சமூகஆர்வலர் அபிப்ரகுமான் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.