தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம்
திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லதம்பியை மரியாதை நிமித்தமாக சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் வெற்றி கொண்டான்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் எம்எல்ஏ அலுவலகத்தில் இன்று திருப்பத்தூர் தெற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளரும் திருப்பத்தூர் நகர்மன்ற உறுப்பினருமான வெற்றி கொண்டான் எம்எல்ஏ நல்லதம்பியை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அப்போது திருப்பத்தூர் நகராட்சி 36 வது வார்டு திருமால், வெங்கடேஸ்வரா நகர், தில்லை நகர் போன்ற பகுதிகளில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரவேண்டும், திருமால் நகர் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

பின்னர் திருப்பத்தூர் தாசில்தார் சிவப்பிரகாசம் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார், அதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் நகராட்சி அலுவலகத்தில் ஆணையர் திருநாவுக்கரசு அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது..