வாடிப்பட்டி
வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் பாராளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனத்திற்கான ஆலோசனை கூட்டம் மதுரை புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் ஆர் பி உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கான அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகளு ஆலோசனை கூட்டம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதி முழுவதும் நடைபெற்று வரும் நிலையில் நேற்று வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் நடந்த இக்கூட்டத்திற்கு வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் காளிதாஸ் தலைமை தாங்கினார்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பையா, மாணிக்கம், வாடிப்பட்டி யூனியன் சேர்மன் ராஜேஸ்கண்ணா, வாடிப்பட்டி பேரூர் செயலாளர் அசோக்குமார், இளைஞர் இளம்பெண்கள் பாசறை நிர்வாகி மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில அம்மா பேரவை இணைச் செயலாளர் வெற்றிவேல், மாவட்ட மகளிரணி செயலாளர் லட்சுமி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் சிங்கராஜ் பாண்டியன், மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் திருப்பதி உள்ளிட்டோர் பேசினர்.
பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமன புத்தகங்களை வழங்கி மதுரை புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் நாடாளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டி அமைப்பது குறித்தும் பூத்கமிட்டியில் புதிய நிர்வாகிகள் நியமனத்திற்கான ஆலோசனைகள் வழங்கி சிறப்புரையாற்றினார்
இக்கூட்டத்தில் கிளை கழக நிர்வாகிகள் மகளிரணியினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் கோட்டை மேடு பாலன் நன்றி கூறினார்.