கோவை நேரு நகர் அரிமா சங்கத்தின் முன்னால் தலைவரும்,கலாம் மக்கள் அறக்கட்டளை நிறுவனர், மற்றும் FAIRA அமைப்பின் தேசிய துணை தலைவரும் ஆன செந்தில் குமார் தனது திருமண நாளை முன்னிட்டு,கோவை நேரு நகர் பகுதியில் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
பன்னாட்டு அரிமா சங்கம் 324 C,ன் சாலை பாதுகாப்பு பிரிவின் ஒருங்கிணைப்பாளர்,கலாம் மக்கள் அறக்கட்டளையின் நிறுவனர், FAIRA அமைப்பின்,தேசிய துணைத் தலைவர்,என் நிலம் பில்டர்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர்,தேஜஸ் அசோசியேட்ஸ் உரிமையாளர் என பல்வேறு பொறுப்புகளை வகிக்கும்,அரிமா செந்தில் குமார் தொடர்ந்து தினந்தோறும் சேவை திட்டங்களை தொடரும் விதமாக பல்வேறு மக்கள் நல பணிகளை செய்து வருகிறார்.
இந்நிலையில் தனது திருமண நாளை கொண்டாடும் விதமாக,கோவை நேருநகர் பகுதியில் பொதுமக்களுக்கான இலவச மருத்துவ மற்றும் இரத்தபரிசோதனை முகாமை நேரு நகர் அரசு பள்ளி வளாகத்தில் ஒருங்கிணைத்தார்.
லயன்ஸ் கிளப் ஆப் கோயமுத்தூர் நேரு நகர், லோட்டஸ் கண் மருத்துவமனை,கோவை ராவ் மருத்துவமனை,குட் லைஃப் இரத்த பரிசோதனை நிலையம் ஆகியோர் இணைந்து நடத்திய இதில்,கண் பரிசோதனை,மகளிர்க்கான முழு பரிசோதனை,மற்றும் இரத்தத்தில் சர்க்கரை மற்றும் ஹீமோகுளோபின் பரிசோதனை ஆகிய முகாம்கள் நடைபெற்றன.
நேரு நகர் லயன்ஸ் சங்கத்தின் தலைவர் மோகன் ராஜ் தலைமையில் நடைபெற்ற இதன் துவக்க விழாவில்,கண் பரிசோதனை முகாமை அரிமா செந்தில் குமார் துவக்கி வைத்தார்.மகளிர் பரிசோதனை முகாமை நேரு நகர் அரிமா சங்கத்தின் பொருளாளரும்,எழுத்தாளருமான கனலி என்கிற சுப்பு செந்தில் குமார் துவக்கி வைத்தார்.
இரத்த சர்க்கரை பரிசோதனை முகாமை மாமன்ற உறுப்பினர் விஜய குமார் துவக்கி வைத்தார்.ஒரு நாள் நடைபெற்ற இந்த இலவச முகாமில் நேரு நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
இந்நிகழ்ச்சியில், நேரு நகர் லயன்ஸ் சங்க முன்னாள் தலைவர்கள் காளியப்பன் லோகநாதன், மற்றும் நிர்வாகிகள் பால்ராஜ், கார்த்திக், ராஜேஷ், குமார்,ஸ்பின் சிட்டி தலைவர் ஸ்ரீதர், மற்றும் சிவக்குமார் தேஜஸ்வினி ரேவதி கல்பனா உட்பட கலந்து கொண்டனர்..
அரிமா செந்தில் குமார்,தனது திருமண நாளை முன்னிட்டு அவரது குடும்பத்தினருடன் இணைந்து பொதுமக்கள் பயன்பெறும் விதமாக மருத்துவ முகாமை நடத்திய இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.