சோழவந்தான்
சோழவந்தான் கற்பகம் கார்டன்ஸ் RMS காலனியில் கற்பக விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
சிவாச்சாரியார் பாலாஜி தலைமையில் சனிக்கிழமை கணபதி பூஜை வாஸ்து சாந்தி கணபதி ஹோமம் நடந்தது.
நேற்று இரண்டாம் கால யாக பூஜையுடன், மஹா பூர்ணாஹூதி நடந்து தொடர்ந்து கடம் புறப்பாடாகி கோவிலைச் சுற்றி வலம் வந்து கற்பக விநாயகர் சிலை மீது புனிதநீர் ஊற்றி மஹா அபிஷேகம் நடந்தது.
பின்னர் சிறப்பு அபிஷேகங்கள் செய்து அலங்காரம் செய்தனர். ஆர்.எம்.எஸ் காலனி குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்