இறந்த காவலர்களின் குடும்ப வாழ்வாதாரம் சிறக்க நிதி உதவி

திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு காவல்துறையில் கடந்த 1993ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் பணிபுரிந்த சிறப்பு உதவி ஆய்வாளர் எம் ரமேஷ் குமார் திடீர் என்று உடல் நலம் பாதிக்கப்பட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர் சிகிச்சை பலனின்றி கடந்த 14.07.2023 அன்று இறந்து விட்டார்

மேலும்
திருவாரூர் மாவட்டம், எடையூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து கடந்த ஆண்டு பணி ஓய்வு பெற்று இருந்த, சிறப்பு உதவி ஆய்வாளர் . ஆர் நம்பிராஜன் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் 17.05.2023 அன்று இறந்து விட்டார்

1993ஆம் ஆண்டு காவலராக பணியில் சேர்ந்த காவலர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் எம் ரமேஷ் குமார் மற்றும் . ஆர் நம்பிராஜன் ஆகியோரின் குடும்பதாரின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில் தலா ரூ.7,04,500 வீதம் இரண்டு காவலர்களின் குடும்பத்தினருக்கு ஆக கூடுதல் ரூ. 14,09,000 (ரூபாய் 14 லட்சத்து ஒன்பதையிரம் மட்டும்) திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டிபி சுரேஷ்குமார் குமார், தலைமையில் இறந்த காவலர்களின் அவர்களுடன் அந்த காலகட்டத்தில் பணியில் இருந்த சக காவலர்கள் ஒன்றாக கூட்டு சேர்ந்து குடும்ப வாழ்வாதாரம் சிறக்க வாழ்வாதார நிதியினை மேற்கண்ட இறந்த காவலர்களின் குடும்பத்தினருக்கு வழங்கினார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *