ராசிபுரம், தமிழ்நாடு: பாப்பி மேட்ரஸ் தங்களுது புதிய “ஸ்லீப் கான்செப்ட் ஸ்டோர்றை” ஜெயம் பர்னிச்சர்ஸ் வேர்ல்ட் உடன் இணைந்து 2500 சதுர அடியில் செப்டம்பர் 3, 2023 ராசிபுரம் மெயின் ரோட்டில், எஸ்.ஆர்.வி பாய்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளிக்கு எதிரே திறக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் P. தங்கமணி B.A., M.L.A., அ.தி.மு.க., நாமக்கல் மாவட்ட செயலாளரும், பாப்பி மேட்ரஸின் நிறுவனர்/ நிர்வாக இயக்குநர் விஜயன், நிர்வாக இயக்குநர் பாலமுருகன், சிஎம்ஓ ராஜ்குமார், மற்றும் ஜெயம் பர்னிச்சர்ஸ் வேர்ல்ட் நிர்வாக இயக்குனர் கோகுல கிருஷ்ணன் கலந்து கொண்டு திறந்துவைத்தனர்.
திறப்பு விழாவை முன்னிட்டு அனைத்து மெத்தை உபகரணங்களுக்கும் “1+1 இலவசம் ” என்ற சிறப்பு சலுகையை செப்டம்பர் 6, 2023 வரை வழங்குகிறது.
தற்போது, பாப்பி மேட்ரஸ் 1 லட்ச சதுர அடியில் நாளொன்றுக்கு தோராயமாக 500 மெத்தைகளை உற்பத்தி செய்கிறது, எதிர்காலத்தில் தினமும் 800 மெத்தைகள் உற்பத்தித் செய்யும் திறனை அடைய லட்சியத் திட்டத்தை கொண்டுள்ளது.
தென்னிந்தியா முழுவதும் உள்ள அதன் மதிப்புமிக்க வாடிக்கையாளர்கள் மற்றும் 3000+ டீலர்களுக்கு உயர்தர மெத்தைகள் மற்றும் மெத்தை உபகரணங்களை வழங்கி வருகிறது. அதே வேளையில், ராசிபுரத்தில் அதன் இருப்பை உறுதிப்படுத்தும் வகையில், பாப்பி மேட்ரஸ் ஸ்லீப் கான்செப்ட் ஸ்டார் அறிமுகமானது நிறுவனத்திற்கு ஒரு முக்கியமான தருணமாக இருக்கும் என்று உறுதியளிக்கிறது.