வலங்கைமான் அருகே உள்ள ஆண்டாங்கோவில்
ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் நடைப்பெற்றது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள மேலவிடையல் ஊராட்சி ஆண்டாங்கோவில் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில்கடந்த (31-ந்தேதி) வியாழக்கிழமை காலை7.30 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்ணியா கவாசனம்,கிராம சங்கல்பம், கணபதி ஹோமம், தன பூஜை, மகா ஹோமம்,மாலை 4.30 மணிக்கு வாஸ்து சாந்தி, நவக்கிரக ஹோமம், மிருத்சங்கிரஹணம்,(01-ந்தேதி) வெள்ளிக்கிழமை காலை8-மணிக்கு குடமுருட்டிஆற்றிலிருந்து திருமஞ்சனம் எடுத்து வருதல், பிரசன்னாபிஷேகம், மாலை 5-மணிக்கு அங்குரார்ப்பணம்,ஆச்சார்யா ரக்க்ஷபந்தனம்,மாலை 6.30மணிக்கு கும்பஸ்தபானம், கலாகர்ஷணம், யாகசாலை பிரவேசம்,யாகசாலை பூஜை ஆரம்பம், திரிவியாஹுதி, இரவு8-மணிக்கு யாகசாலை
பூர்ணாஹுதி, தீபாராதனை காலம்-1,நேற்று சனிக்கிழமை காலை 8-மணிக்கு யாக பூஜை ஆரம்பம், திரிவியாஹுதி, காலை11-மணிக்கு பூர்ணாஹுதி, தீபாராதனை காலம்-2,
மாலை 5.30 மணிக்கு யாகசாலை பூஜை ஆரம்பம், இரவு 7-மணிக்கு கோ பூஜை, கஜ பூஜை, ஸ்வாபூஜை,சுவாசினிபூஜை, வடுக பூஜை, இரவு 8.30 மணிக்கு திரிவியாஹுதி
பூர்ணாஹுதி, தீபாராதனை காலம்-3,இரவு 9-மணிக்கு கலைமாமணி இசைபேராசிரியர் ஆண்டாங்கோவில் ஏ. வி.
எஸ். சரவணன் பாட்டு,எஸ். எஸ். விஜய சாரதிவயலின்,கும்பகோணம்ஏ. சரவணன் மிருதங்கம்,
புதுக்கோட்டை கோபிகிருஷ்ணா கஞ்சிரா, கோ. ரகுராமன்
முகர்சிங் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
ஞாயிற்றுக்கிழமை காலை6. 30 மணிக்கு யாகசாலை பூஜை ஆரம்பம், பிம்ப சுத்தி, மூர்த்தி ரக்ஷாபந்தனம்,ஸ்பர்ஸாஹுதி, காலை9.30 மணிக்கு மேல் 10.20மணிக்குள் விமானம்,ஸ்ரீமகாமாரியம்மன்மூலஸ்தானம், ஏனைய
பரிவார மூர்த்தி களுக்கும் மகா கும்பாபிஷேகம்காலை
11-மணிக்குஅம்பாளுக்குமகா அபிஷேகம், அருட்பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. யாகசாலை பூஜைகளை
ஸ்ர்வசாதகம் சிவஸ்ரீவி. உண்ணபுரிஸ்வர சிவாச்சாரியார், ஸ்தலசிவாச்சாரியார் சிவஸ்ரீடி. சுப்பிரமணிய சிவாச்சாரியார், ஆலயஅர்ச்சகர் எஸ். ரவி பூசாரி யார், மங்கள இசை ஆண்டான் கோவில் ஏ. என். நீலமேகம் குழுவினர், விழா ஏற்பாடுகளை திருப்பணிகுழுவினர், மேலவிடையல் ஊராட்சி
ஆண்டான் கோவில் கிராமவாசிகள் சிறப்பாக செய்து இருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *