திருவள்ளூர்
தண்டலச்சேரி ஊராட்சியில் உள்ள வீரலட்சுமி அம்மன் கோவில் இரண்டாம் ஆண்டு தீமிதி திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது இதில் ஆண்கள் சிறுவர்கள் உட்பட 117 பேர் நபர்கள் தீ மிதித்து நேர்த்தி கடனை செலுத்தினர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுக்கா கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது தண்டலச்சேரி ஊராட்சி இந்த ஊராட்சியில் பல நூற்றாண்டு பழமை வாய்ந்த புகழ் பெற்ற அருள்மிகு வீரலட்சுமி அம்மன் திருக்கோவில் உள்ளது.
இக்கோவில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் வெகு விமர்சை யாக நடைபெற்றது இதனையடுத்து நேற்று 2-ஆம் ஆண்டு தீமிதி திருவிழா நடந்தது. இதில் அப்பகுதியை சேர்ந்த பெரி யவர்கள் சிறுவர்கள் என 117 நபர் கள் காப்பு கட்டி விரதம் இருந்து தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
முன்னதாக இக்கோவிலில் கடந்த 10 தினங்களாக உற்சவ விழாக்கள் நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் கிருஷ்ண மூர்த்தி, ரவி, ராஜா, முருகன், தாஸ், பலராமன், முருகன், வடிவேலு, அச்சுதனன்,மற்றும் கிராம பொது மக்கள் செய்திருந்தனர் தீமிதி திருவிழாவை சுற்றுப்பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொது மக்கள் நேரில் வந்து கண்டுகளித்தனர்.