வலங்கைமான் அருகே உள்ள நாகக்குடி
ஸ்ரீ ஆனந்தவள்ளி சமேதஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள நன்னிலம் வட்டம்நாகக்குடியில் ஸ்ரீ ஆனந்தவள்ளி சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் சிவாலயம் இருந்து வருகிறது.

சுமார் 1500ஆண்டுகள் பழமை வாய்ந்த இவ்வாலயம்
மூலஸ்தானத்தில் அருள்பாலிக்கும் சிவபெருமானை நாகங்கள் பூஜித்ததால்இவ்வூர் நாகக்குடி என்று
அழைக்கப்படுகிறது.

மேலும் இவ்வாலய மூலவரை அகஸ்திய முனிவர் வழிபட்டு வரங்கள் பெற்றதாகவும்வரலாறு கூறுகிறது. மேலும் நவக்கிரக தோஷங்களில் நாக தோஷம் நிவர்த்தி அளிக்கும் ஸ்தலங்களில்முதன்மையானதாக இவ்வாலயம் திகழ்ந்து
வருகிறது. இவ்வாறு பல்வேறு சிறப்புகளை கொண்டதும் இந்துசமயஅறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலும் இருந்து வரும் இவ்வாலயம் உபயதாரர்கள் மூலம் திருப்பணிகள் நடைபெற்று கும்பாபிஷேகமானது நேற்று நடைபெற்றது. இதை முன்னிட்டு நேற்றுகாலை வரை 4 காலயாகசாலை பூஜைகள் நடைபெற்று, யாகசாலை பூஜையின் நிறைவாக
மகா பூர்ணாஹுதி தீபாராதனை நடைபெற்றது.

பின்னர் யாக சாலையிலிருந்துபுனித தீர்த்த நீர் கடங்கள்
புறப்பாடு நடைபெற்றுசிவாச்சாரியார்கள் மூலம்
ராஜகோபுர விமானம், மூலஸ்தான விமானம்,
மற்றும் அம்பாள், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ சுப்பிரமணியர் முதலான
பரிவார விமான கலசங்களுக்கு புனித நீர்ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *