அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேரூராட்சி பகுதியில் ரூ.1 கோடியே 49 லட்சம் மதிப்பீட்டில் டாக்டர்.அம்பேத்கர் பேருந்து நிலைய விரிவாக்க பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது.
இதில் வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்து பேசினார் தளபதி மு.க.ஸ்டாலின் அவரது தலைமையில் இந்த ஆட்சி பொறுப்பேற்று தமிழகத்தில் எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி தந்து வருகிறார்
குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டத்தை தொடங்கியுள்ளார் இதேபோன்று 234 தொகுதிகளிலும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன நமது சோழவந்தான் தொகுதி அளவில் அதிக கவனம் செலுத்தி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன அதில் ஒரு திட்டம் தான் இந்த அம்பேத்கார் பேருந்து நிலையம் இந்த பேருந்து நிலையம் விரைவில் புது பொலிவு பெற்று மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிவித்தார்
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சங்கீதா தலைமை தாங்கினார். சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், திமுக மாவட்ட அமைத்தலைவர் பாலசுப்ரமணியன், ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன், நகர் செயலாளர் ரகுபதி, பேரூராட்சி சேர்மன் ரேணுகாஈஸ்வரி கோவிந்தராஜ், துணை சேர்மன் சுவாமிநாதன், மற்றும் கவுன்சிலர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் சேதுராமன், செயல் அலுவலர் ஜுலான்பானு, பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், ஒன்றிய அவைத்தலைவர் நடராஜன், அலங்காநல்லூர் யூனியன் சேர்மன் பஞ்சுஅழகு, துணை சேர்மன் சங்கீதா மணிமாறன், பாலமேடு பேரூராட்சி சேர்மன் சுமதிபாண்டியராஜன், நகர செயலாளர் மனோகரவேல்பாண்டியன், ஒன்றிய கவுன்சிலர் தண்டலை சரவணன், ஒன்றிய துணைச் செயலாளர்கள் அருண்குமார், ராதாகிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவர்கள் செந்தில்குமார், காயத்ரி இதயச்சந்திரன், முன்னாள் ஊராட்சி மன்றதலைவர்தனுஷ்கோடி, மாவட்ட அணி அமைப்பாளர்கள்
ஏ.வி.கார்த்திக், பிரதாப், விஜயகுமார், ராகுல், ஒன்றிய அமைப்பாளர்கள் சந்தனகருப்பு மருது, தவசதீஷ்குமார், கோட்டைமேடுராஜாஜி, தனிச்சியம் செல்லமணி, வெங்கடேஷ், வலசைகார்த்திக்ராயர், துரை மற்றும் திமுக கூட்டணி கட்சிகளான அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் வட்டாரத் தலைவர் சுப்பாராயல், நகரத் தலைவர் சசிகுமார், முன்னாள் வட்டாரத் தலைவர் மலைக்கனி, மற்றும் திரவியம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சிந்தனைவளவன், முன்னாள் மாவட்ட செயலாளர் செல்வஅரசு, மாவட்ட அமைப்பாளர் அதிவீரபாண்டியன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.