பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
அறிவுசார் சமுதாயத்தை உருவாக்கும் அரும்பணியை ஆற்றிவரும் ஆசிரியர்களுக்கு உளம்கனிந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகள் என மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவரும் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா தெரிவித்தார்…..
அறிவுசார் சமுதாயத்தை உருவாக்க அரும்பணியை ஆற்றிவரும் ஆசிரியர்களுக்கு இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்களை மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் பாபநாசம் சட்டமன்ள தலைவருமான பேராசிரியர்
எம்.எச்.ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
மேலும்
நாட்டின் வளர்ச்சிக்கும் சமூகத்தின் மேம்பாட்டிற்கும் அடித்தளமாக திகழ்பவர்கள் ஆசிரியர்கள். ஆசிரியர் பணியின் மதிப்பு இமயத்தை போன்று உயர்ந்தது அளவிட முடியாதது.
சாதி மத பேதமில்லாத சமத்துவம் மிக்க மன உணர்வுகளை மாணவர்கள் மத்தியில் விதைத்து மனிதநேய மாண்புகளை வளர்க்கும் ஆசிரியர்கள் போற்றத்தக்கவர்கள். மாணவர்களை முழுமையாக செதுக்கும் ஆசிரியர்களுக்கு உங்களில் ஒருவனாக வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வதில் கூடுதல் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் நல்வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்துள்ளார்..