வ.உ.சிதம்பரம்பிள்ளை பிறந்த நாளையொட்டி பெரியஊர்சேரி ஊராட்சியில் அமைந்துள்ள அவரது திரு உருவ சிலைக்கு சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் மாலை அணிவித்து மரியாதை
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள பெரியஊர்சேரி ஊராட்சியில் செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளை பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து வ.உ.சி பேரவை சார்பாக நடைபெற்ற மருத்துவ முகாமையும் தொடங்கி வைத்தார் அதனைத் தொடர்ந்து
பெரியஊர்சேரி திமுக கிளை கழக நிர்வாகி சேகர் அவரது உடல்நிலை சரியில்லை என்று அறிந்த சட்டமன்ற உறுப்பினர் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று நலம் விசாரித்ததுடன் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.
அவருடன் ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன், பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், ஒன்றிய அவைத் தலைவர் நடராஜன், நகரச் செயலாளர் ரகுபதி, பேரூராட்சி தலைவர் ரேணுகாஈஸ்வரி கோவிந்தராஜ், பேரூராட்சி துணைத் தலைவர் சுவாமிநாதன், யூனியன் துணை சேர்மன் சங்கீதா மணிமாறன் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார், ஒன்றிய பொருளாளர் சுந்தர், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் ஆதிசங்கர், விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட துணை அமைப்பாளர் பிரதாப், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சந்தன கருப்பு, தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் தவசதீஷ், கோட்டைமேடு ராஜாஜி, ஆதனூர்முருகன்,மற்றும் பொறியாளர் அணி ராகுல், வலசை கார்த்திக்ராயர், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.