மேட்டுப்பாளையம் அடுத்த ஜடையம்பாளையத்தில் அமைந்துள்ள அன்னூர் K. கோவிந்தசாமி நாயுடு குடும்பத்தினர்கே. ஜி. தொழில் நிறுவனங்களின் தென் திருமலை திருப்பதி ஸ்ரீவாரி ஆனந்த நிலையத்தில் பவித்ரோற்சவத்தை முன்னிட்டு ஸ்ரீ மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் மாட வீதியில் புறப்பாடு உற்சவம் சிறப்பாக நடைபெற்றது,
உற்சவத்தை முன்னிட்டு சுப்ரபாதம், புண்ணியாக வாஜனம், ஹோமம்,ஆற்று முறை,பிரசாத கோஷ்டி ஆகிய வைபவங்கள் காலை முதல் நடைபெற்று வந்தது.
விழாவின் முக்கிய நிகழ்வானஸ்ரீ மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் வேத விற்பனர்கள் மந்திரங்கள் ஓத, மங்கள வாத்தியங்கள் ஒளிக்க திருவீதி உலா வந்தார், இதையடுத்து வசுத்தாரா ஹோமம், ஏகாந்த சேவையுடன் சிறப்பு நிகழ்வுகள் நிறைவடைந்தன.