பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்
ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, தா.பழூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில்,நாயகனைபிரியாள், காடுவெட்டான்குறிச்சி,கோட்டியால் – பாண்டிபஜார் ஆகிய ஊராட்சிகளில் தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் திமுக சார்பில் கலைஞர் மு கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தா.பழூர் கிழக்கு ஒன்றிய பகுதிகளான நாயகனை பிரியாள் காடுவெட்டாங்குறிச்சி கோட்டியால் ஆகிய பகுதிகளில் தெருமுனைப் பிரச்சார பொதுக்கூட்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் தலைமையில் நடைபெற்றது.
இதில் தலைமை கழக பேச்சாளர் கரூர் முரளி அவர்கள் சிறப்புறையாற்றினர்.
இந்நிகழ்வில், கழக சட்ட திட்ட திருத்தக்குழு இணைச் செயலாளர் சுபா.சந்திரசேகர், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் இரா.அண்ணாதுரை,மாவட்ட விவசாய தொழிலாளரணி அமைப்பாளர் என்.ஆர்.ராமதுரை, தலைமை கழக பேச்சாளர் இரா.இளஞ்செழியன், ஒன்றிய பொருளாளர் த.நாகராஜன்,ஒன்றிய கழக துணை செயலாளர்கள் க.சாமிதுரை, இந்துமதி நடராஜன், ராஜேந்திரன்
மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் ந.கார்த்திகைகுமரன், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் முனைவர் முருகானந்தம்,மாவட்ட மகளிர் தொண்டர் அணி துணை தலைவர் எழிலரசி அர்ஜுனன்,மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் த.குணசீலன், மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் ஆர்.கே.நடராஜன்,மாவட்ட மருத்துவர் அணி தலைவர் மருத்துவர் ம.சங்கர் மற்றும் கழக உடன்பிறப்புகள் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.
கிளைச் செயலாளர்கள் நெடுஞ்செழியன் இளமதி ஆபிரகாம் மாயவன் வினோத்கண்ணன் தட்சிணாமூர்த்தி ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.