வலங்கைமானில் காங்கிரஸ் தொழிற்சங்கம் டி சி டி யூ
சார்பில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் காங்கிரஸ் தொழிற்சங்கம் டி சி டி யூசார்பில் தொழிற்சங்கம்
மாவட்ட தலைமை அலுவலகத்தில் ஆசிரியர் தினம் விழா நடைபெற்றது. விழாவில்காங்கிரஸ் தொழிற்சங்கம் டி சி டி யூ
திருவாரூர் மாவட்டத் தலைவர் குலாம் மைதீன் தலைமையில், வலங்கை நகரத் தலைவர் அஹமது மைதீன், ஓட்டுனர் அணி
தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில், சிறப்பு
அழைப்பாளராக வலங்கைமான் வட்டார காங்கிரஸ் தலைவர்
சத்தியமூர்த்தி ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து கெளரவித்தது சான்றிதழ்வழங்கினார்.
இதில் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் ப. சந்தானம், பவானந்தம்
தெய்வ. பாஸ்கரன், சிவ.செல்லையன் ஆகியோர்
கலந்து கொண்டனர். முடிவில் மாணவர் காங்கிரஸ் நகரத் தலைவர் சந்தோஷ்அனைவருக்கும் நன்றி கூறினார்.