பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாசம் அருகே சிபிஐ.எம்.எல் அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் சார்பில் பரப்புரை பயணம்
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் சிபிஐ .எம்.எல் அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் சார்பில் பரப்புரை பயணம் பாபநாசம் ஒன்றிய செயலாளர் செல்லதுரை தலைமையில் நடைப்பெற்றது.
மாநில பொதுசெயலாளர் குணசேகரன், மாநிலக்குழு உறுப்பினர் மாசிலாமணி, மாவட்ட செயலாளர் கண்ணையன், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் முருகானந்தம் , பிரபு மற்றும் விவசாய சங்க மாநிலக்குழு உறுப்பினர் நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டு நிலம், வேலை, கூலி, ஜனநாயகம் பெற போராடுவோம் எனவும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படும் பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சியை வெளியேற்றுவோம் ஆகியவற்றை வலியுறுத்தியும் , இந்திய மக்களை வஞ்சிக்கும் மத்திய அரசை கண்டித்தும் பேசினார்கள்.