பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
வரும் 2024 ல் நாடாளுமன்ற தேர்தலில் மோடி அரசை இந்தியாவில் இருந்து வெளியேற்ற வேண்டும் என கபிஸ்தலத்தில் அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் மாநாட்டில் வலியுறுத்தல்….

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் சார்பில் முதலாம் ஆண்டு மாவட்ட மாநாடு மாவட்ட தலைவர் விஜயாள் தலைமையில் நடைபெற்றது.

இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில அமைப்பாளர் ரேவதி, மாநிலக்குழு உறுப்பினர் மாதவி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர் மாநாட்டில் நாட்டில் நிலவும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து மணிப்பூர் மாநிலத்தில் பெண்கள் நிர்வாணப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததை பாஜக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த செயலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது
வரும் 2024 ல் நாடாளுமன்ற தேர்தலில் மோடி அரசை இந்தியாவில் இருந்து அடியேடு வெளியேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மாநாடு நடைபெற்றது.