சோழவந்தான்
சோழவந்தானில் முன்னாள் அஇபாபி மாநில தலைவர் பி கே மூக்கையாதேவரின் 44.வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பேரூந்து நிலையம் முன்பு உள்ள அவரது முழ உருவ சிலைக்கு பேரூர் திமுக சார்பில் செயலாளர் சத்தியபிரகாஷ் தலைமையில் மாலையணிவித்து மௌனஅஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்வில் பேரூராட்சி சேர்மன் ஜெயராமன்.ஒன்றிய நிர்வாகி ராஜபெரியகருப்பன் .பேரூர் கவுன்சிலர்கள் கொத்தாளம். செந்தில். சிவா. குருசாமி.பேட்டை பெரியசாமி எஸ். எம் பாண்டி விவசாய அணி முணியான்டி .சங்கரபாண்டி சங்ககோட்டை சந்திரன் மாவட்ட பிரதிநிதி சுரேஷ்..ரவி. வார்டு நிர்வாகி முருகன்.மாரிமுத்து.உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதேபோல் அமமுக சார்பில் பேரூர் செயலாளர் திரவியம் தலைமையில் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செய்தனர் இதில் மாவட்ட நிர்வாகி வீரமாரி பாண்டியன்.பொதுகுழ ராமநாதன் ஓன்றிய நிர்வாகிகள் மீனாட்சிசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.