நாமக்கல்
ஜேடர்பாளையம் அருகில் இன்று அதிகாலை விவசாயின் தோட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டர் வண்டி மர்ம நபர்களால் தீயிட்டு கொளுத்தப்பட்டது இதனால் மீண்டும் அப் பகுதியில் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அடுத்துள்ள ஜேடர்பாளையம் அருகே உள்ள வடக்கு தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பண்ணன் மகன் சுப்பிரமணியம் இவரது விவசாயத் தோட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விவசாய டிராக்டர் வண்டிக்கு று அதிகாலை 3 மணியளவில் மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர்
டிராக்டர் தீ எரிந்து கொண்டு இருப்பதை பார்த்த உரிமையாளர் சுப்பிரமணியம் தீயை அணைக்க முயற்சி செய்துள்ளார் தீ அணைக்க முடியாமல் டிராக்டர் முழுவதும் எரிந்துவிட்டன இந்த சம்பவம் காரணமாக ரூ 2.50 லட்சம் சேதம் அடைந்துள்ளது
இது குறித்து ஜேடர்பாளையம் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச. ராஜேஷ் கண்ணன் சேலம் சரக டிஐஜி ராஜேஸ்வரி ஆகியோர்
நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்
மேலும் இது குறித்து விசாரணை செய்ய உத்தரவிட்டனர்