நாமக்கல் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பாக நாமக்கல் பூங்கா சாலையில் பிச்சை கொடுக்கும் போராட்டத்தை நடத்தினார்கள்
நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக பட்டியலலின தலைவர் ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் கே. மனோகரன் நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் என். பி. சத்தியமூர்த்தி நாமக்கல் நகர பாஜக தலைவர் கே. பி. சரவணன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பாஜகவினர் இதில் கலந்து கொண்டார்கள்
அப்போது அவர்கள் மத்திய அரசு பட்டியல் இன மக்களுக்கான திட்ட செலவுகளை வேறு திட்டங்களுக்கு செயல்படுத்தும் திமுக அரசை கண்டித்தும் தொடர்ந்து அவர்கள் பட்டியலின மக்களுக்கு ஒதுக்க்கின்ற நிதியை இவ்வாறு முறைகேடாக பயன்படுத்துவதை கண்டித்தும் அதற்கு வேறு பெயரிட்டு மத்திய அரசு திட்டங்களை திமுக அரசு மறைப்பது குறித்தும் கண்டித்து இந்த பிச்சை கொடுக்கும் போராட்டத்தை நடத்தினர்
அப்போது இந்த நடவடிக்கைகளை கண்டித்து திமுக அரசு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர்கள் வைத்தார்கள்
பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் கே.மனோகரன் பேசுகின்ற பொழுது பட்டியல் இன மக்களை பல்வேறு வகைகளில் திமுக அரசு வஞ்சிக்கிறது என்றும் கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் ஆதரவாக செயல்படுகிறது என்றும் பாரதம் ஒரு இந்து நாடு என்றும் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒரு கிறிஸ்தவர் என்றும் குற்றம் சாட்டினார்
இதில் மாவட் பட்டியல் அணி பொதுச்செயலாளர் கந்தசாமி
துணை தலைவர் கே. அருள்குமார்மாநில வர்த்தக பிரிவு செயலாளார் அகிலன்மாவட்ட பாஜக பொதுசெயலாளளர், முத்துக்குமார், சேதுராமன், ரவி, பொருளார் செந்தில்நாதான்,மாவட்ட செயலாளர் ராம் குமார், தமிழ்ரசு, எதிஸ்குமார், மாவட்ட மகளிர்அணி தலைவி சித்ரா மாவட்ட விவசாய அணி தலைவர் செந்தில் வாசன் மாவட்ட சிறுபான்மையினர் தலைவர் ஷாஜகான், நகர பாஜக தலைவர் கே பி சரவணன் , எருமைப்பட்டி ஒன்றிய பாஜக தலைவர் சதீஷ்குமார்மற்றும் ஒன்றிய நகர பேரூராட்சி பாஜக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டார்கள்