தென்காசி மாவட்டம்
செங்கோட்டை நகர திமுக அலுவலக த்தில் வைத்து பொற்கிழி பெற்ற கழக மூத்த முன்னோடிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்ச்சி நகர கழக செயலாளா் வழக்கறிஞா் ஆ.வெங்கடேசன் தலைமையில் நடைப்பெற்றது.
திமுக இளைஞர் அணி செயலாளரும், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர். ஆகியோர் மற்றும் தென்காசி தெற்கு மாவட்ட கழக செயலாளர் வே.ஜெயபாலன் ஆகியோர்களுக்கும் செங்கோட்டை நகர திராவிட முன்னேற்ற கழக மூத்த முன்னோடிகள் நன்றியினை தெரிவித்தார்கள்.
தென்காசி தெற்கு மாவட்டத்தில் பொற்கிழி பெற்ற 1050 நபர்களில் செங்கோட்டை நகரப்பகுதியை சேர்ந்த 37 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பொற்கிழி பதக்கம்
பெற்ற அனைவரும் நன்றி தெரிவித்தனர்
கூட்டத்தில் வரும் டிசம்பர் மாதம் சேலத்தில் நடைபெற உள்ள கழக இளைஞர் அணி 2-வது மாநில மாநாட்டிற்கு, நகரில் உள்ள இளைஞர் அணி சகோதரர்கள் பெரும்பான்மையினரை திரளாக திரட்டி தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் நகர கழக நிர்வாகிகள், வார்டு கழக செயலாளர்கள் பிரதிநிதிகள் உட்பட பலா் கலந்து கொண்டனர்.