ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்

திருவாரூர் மாவட்டம் முழுவதும் ஒன்றிய அரசின் விலைவாசி உயர்வு, வேலையின்மை உள்ளிட்ட. கொள்கைகளை கண்டித்து ரயில் மறியல் மற்றும் தபால் நிலையங்கள் முன்பாக மறியல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக மறியல் போராட்டம்

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியத்தில் உள்ள சிங்களாஞ்சேரி என்ற இடத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் ஒன்றியம்,திருவாருர் நகரம், கொரடாச்சேரி ஒன்றியம் ஆகிய இடைக்கமிட்டி சார்பாக கொரடாச்சேரி ஒன்றியத்தில் உள்ள சிங்களாஞ்சேரி ரயில்வே கேட்டில் எர்ணாகுளம் இருந்து காரைக்கால் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து போராட்டம் நடைபெற்றது.

இரயில் மறியல் போராட்டத்திற்க்கு சிபிஎம் மாவட்ட செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.ஜி.ரகுராமன், பி.கோமதி,ஒன்றிய செயலாளர்கள் (திருவாரூர்) என். இடும்பையன், நகரசெயலாளர் எம்.தர்மலிங்கம் (கொரடாச்சேரி)டி.ஜெயபால் மற்றும் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.தம்புசாமி,சிஐடியு மாவட்ட தலைவர் எம்.கே.என். அனிபா மற்றும் சிபிஎம் மாவட்ட குழு, ஒன்றிய குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட வர்க்க வெகுஜன அரங்க தோழர்கள் உள்ளிட்ட பெண்கள் 120 பேரும் ஆண்கள் 380 பேரும் என 500க்கும் மேற்பட்ட தோழர்கள் காவல்துறை கைது செய்து தேவர் கண்ட நல்லூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *