திருவள்ளூர்
ஆரணி அரசினர் ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதி வண்டிகளை எம் எல் ஏக்கள் உள்ளிட்ட பலர் பங் கேற்று மாணவர்களுக்கு வழங்கி சிறப்புரையாற்றினர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன் னேரி தாலுக்கா சோழவரம் ஒன்றி யத்துக்கு உட்பட்டது ஆரணி பேரூ ராட்சி ஆகும் இந்த பேருராட்சி பகுதியில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது.
இப் பள்ளியில் பள்ளி கல்வித்துறை சார்பில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், கும்மிடிப்பூண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி ஜே கோவிந்தராஜன், ஆரணி பே ரூர் கழக திமுக நகர செயலாளர் முத்து, ஆரணி பேரூராட்சி தலை வர் ராஜேஸ்வரி, துணைத்தலை வர் வக்கீல் சுகுமார், கவுன்சிலரும் முன்னால் பேரூர் கழகச் செயலாள ருமான கண்ணதாசன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பள்ளியை ச் சேர்ந்த 92 மாணவர்களுக்கு தமி ழக அரசின் விலையில்லா மிதி வண்டிகளை வழங்கினார்.
மேலும் நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஏகாம்பரம், துணை தலைமை ஆசிரியர் செந்தில் மோகன், ஆரணி நகர திமுக பொருளாளர் கரிகாலன், ஆரணி பேரூராட்சி கவுன்சிலர் சந்தான லட்சுமி குணபூபதி, மற்றும் ஆசிரி யர்கள் கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்தி ரசேகர் பள்ளிக்கு இந்த நிதியாண் டில் சுற்றுப்புற சுவர் உள்ளிட்ட திட்ட பணிகள் செய்து தருவதாக தெரிவித்தார்.