கோவை மாநகராட்சி 95 வது வார்டு பகுதியில் உள்ள பாரதி நகர் பகுதியில் புதிய சாலை அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டது..
கோவை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பல்வேறு பழுதான சாலைகள் மற்றும் பாதாள சாக்கடை பணிகள் நிறைவுற்ற இடங்களில் சாலை பணிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில் கோவை மாநகராட்சி 95 வது வார்டு பகுதியில் உள்ள போத்தனூர் பாரதிநகர் பகுதியில் உள்ள பிரதான சாலை அமைக்கும் பணிகளை 95 வது மாமன்ற உறுப்பினர் அப்துல் காதர் துவக்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து நீண்ட காலமாக சாலை அமைக்க கோரிக்கை விடுத்த நிலையில் தற்போது சாலை அமைக்கும் பணிகள் துவங்கி உள்ளதால் அந்த பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்..