நாமக்கல்
நாமக்கல் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக
மக்களை பாதிக்கும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்து, வேலையினமையை போக்கிடு, அரசு காலி பணியிடங்களை நிரப்பிடு, வேளாண் விலை பொருள்களுக்கு குறைந்தபட்ச விலைக்கான சட்டம் இயற்று, பொதுத்துறையை தனியார்மயம் ஆகாதே, காண்ட்ராக்ட்- அவுடசோர்சிங் முறையை கைவிடு, முறைசாரா தொழிலாளர் சமூக பாதுகாப்பை உத்தரவாத படுத்திடு,
என வலியுறுத்தி நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனமான பி. எஸ். என. எல் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடத்தினார்கள்
மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் எஸ் கந்தசாமி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மாவட்ட செயற்குழு நா. வேலுசாமி கே. தங்கமணி எஸ் .தமிழ் மணி, ஏ டி கண்ணன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டவர்கள் காவல் துறையால் கைது செய்யப்பட்டு நாமக்கலில் இருக்கும் திருமண மண்டபம் ஒன்றில் அடைக்கப்பட்டனர்
இதேபோன்று பள்ளிபாளையம் ஆர் எஸ் பகுதியில் இருக்கும் ரயில் நிலையம் அருகே படைவீடு பெருமாள் தலைமையில் ரயில் மரியம் போராட்டம் நடத்தினர் இதேபோன்று எலச்சிபாளையம் பகுதியிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சுரேஸ் என்பவர் தலைமையில் மறியல் போராட்டத்தை நடத்தினார்கள்