திருவள்ளூர்

ஸ்ரீ ரூபா ராம் அறக்கட்டளை சார்பில் சுதந்திரப் போராட்ட வீரர் கக்கன் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை பார்க்க மாணவ மாணவிகளுக்கு ஏற்பாடு செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா மீஞ்சூர் அடுத்த வள்ளூர் பகுதியில் ஸ்ரீ ரூபா ராம் அறக்கட்டளை உள்ளது. இந்த அறக்கட்டளையின் சார்பில் சுதந்திர போராட்ட வீரரும் காமரா ஜர் ஆட்சி காலத்தில் அமைச்சராக பதவி வகித்த கக்கன் என்பவரு டைய வாழ்க்கை வரலாற்றில் திரைப்படமான கக்கன் படத்தை மாணவ மாணவிகள் பார்த்து தெரிந்து கொள்வதற்காக ஸ்ரீ ரூபா ராம் அறக்கட்டளை சார்பாக கக் கன் திரைப்படத்தை 70 க்கும் மேற் பட்ட அரசு பள்ளி மாணவர்கள் மாணவிகள், தனியார் பள்ளி மாணவர்கள் மாணவியர்கள் மற் றும் சமூக ஆர்வலர்கள் பார்க்க, சென்னை செங்குன்றத்தில் உள்ள, திரையரங்கில் ஏற்பாடு செய்தனர்,

உயர்திரு கக்கன் ஐயா அவர்கள் இந்தியா சுதந்திரம் பெற மற்றும் அமைச்சராக பொறுப்பேற்ற பின் நேர்மையாக இருந்து நேர்மைக்கு பெருமை சேர்த்தவர் எனவே பள்ளி மாணவர்கள் மாணவிகள்,கக்கன் ஐயா அவர்களைப் போல் வாழ்க் கையில் நேர்மையாக இருக்க வேண்டும மற்றும் கக்கன் ஐயா வைப் போல் நீங்களும் வாழ்க்கை யில் இருக்க வேண்டும், உருவாக வேண்டும் என்று ஸ்ரீ ரூபாராம் அறக்கட்டளை சார்பாக திருமதி டாக்டர்.சுபத்ரா முருகன்ராஜ், திரைபடம் பார்க்க வந்த பள்ளி மாணவர்களிடையே, மாணவிகளி டையே உரையாற்றினார்,

இதணயடுத்து பள்ளி மாணவர்க ளும், மாணவிகளும் கக்கன் ஐயா திரைப்படத்தை பார்த்தபின் கக் கன் ஐயாவை போல் நேர்மையாக இருப்போம் மற்றும் கக்கன் ஐயா பெரும் கஷ்டத்தை தாங்கிய பின் னர் தான் பெரிய இடத்தை பிடித் தார் நாங்களும் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் வாழ்க்கையில் போரா டுவோம், நேர்மையாக இருப்போம் என்று மாணவ மாணவிகள் கூறி னார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *