பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
குறுவை சாகுபடி நஷ்டம் அடைந்த நிலையில் சம்பா சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்குமா என விவசாயிகளுக்கு அரசு தெளிவுபடுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டு டெல்டா மாவட்டங்களில் அதிக அளவில் குருவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையில் ஜூன் மாதம் 105 அடி தண்ணீர் இருந்தும் போதிய மழை இல்லாத காரணத்தாலும் ,மேட்டூர் அணைக்கு போதிய நீர் வரத்து இல்லாத காரணத்தாலும், தண்ணீர் பற்றாக்குறை காரணமாக மேட்டூரில் இருந்து மிக மிக குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்பட்டு மேட்டூர் அணை நீர்மட்டம் 50 அடிக்கு கீழ் இருந்து வருகிறது
இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதிகளில் குருவை சாகுபடிக்கு தண்ணீர் பற்றாக்குறையால் மகசூல் குறைந்த நிலையில் ஒரு குவிண்டால் நெல்லிற்கு சிறப்பு ஊக்கத்தொகையாக ரூபாய் 500 அல்லது ஏக்கருக்கு 15,000 வழங்க வேண்டும் எனவும் அடுத்த வாரத்திலிருந்து முழு வீச்சில் சம்பா சாகுபடி நடைபெற உள்ளதால் சம்பா தாளடி பயிர் செய்ய 200 முதல் 250 டிஎம்சி அளவுக்கு தண்ணீர் தேவைப்படும் என்பதால் , நடப்பு சம்பா, தாளடி பயிர் பயிருக்கான விவசாய பணிகள் சில நாட்களில் துவங்க வேண்டி இருப்பதால், விவசாய பணிகள் தொடர்வதை பற்றியும், வடகிழக்கு பருவமழையின் தாக்கம் பற்றியும், வானிலை முன்னறிவிப்புகள் பற்றியும், தண்ணீர் இருப்பு பற்றியும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் அரசு கலந்து ஆலோசித்து செப்டம்பர் 10ம் தேதிக்குள் விவசாயிகளுக்கு ஒரு தெளிவான அறிவிப்பை அரசு உடனடியாக வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பேட்டி:சீனிவாசன்- விவசாயி-கணபதிஅக்ரஹாரம்