மேட்டுப்பாளையத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் கைது
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில்,சனாதன தர்மத்திற்கு எதிராக கருத்து தெரிவித்த தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதியை கண்டித்து தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் சனாதன தர்மத்திற்கு எதிராகவும் இந்துக்களின் மனம் புண் படும்படியும் கருத்து தெரிவித்த உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்காத நிலையில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சுமார் 120க்கும் மேற்பட்ட இந்து முன்னணியினரை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
நிகழ்ச்சியில் இந்து முன்னணி கோவை கோட்ட செயலாளர் ராஜ்குமார் மாவட்ட தலைவர் கே. டி. சிவப்புகழ்,வடக்கு மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் வடக்கு மாவட்ட துணைத்தலைவர் தங்கவேல்,ஆர். எஸ். எஸ் கோட்ட செயலாளர் ஆனந்த், பா.ஜ.க மாநில செயற்குழு உறுப்பினர் சதீஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்