வேலை கொடு.. விவைவாசியை குறைத்திடு என்பது உள்ளிட்ட ஒன்பது உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும்,ஒன்றிய அரசை கண்டித்தும் தருமபுரி ரயில் மறியல் போரட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஈடுபட முயன்றனர், ஊர்வலமாக கட்சி கொடியேந்தியபடி சென்ற கம்யூனிஸ்ட் கட்சியினரை ரயில்வே நிலையத்திற்குள் நுழைந்துவிடாதபடி போலீசார் இரும்பு பேரி கார்டுகளை கொண்டு தடுத்து நிறுத்தினர், இதனை தொடர்ந்து ரயில் நிலையம் முன்பாக முழக்கமிட்டபடி போரட்டத்தில் ஈடுபட்டனர், அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்