வலங்கைமான் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்
83 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் வலங்கைமான் திமுக மேற்கு, கிழக்கு ஒன்றிய
செயலாளர்கள் வீ. அன்பரசன், நரசிங்க மங்கலம் கோ. தெட்சிணாமூர்த்தி, பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் கெளரவ தலைவரும், திமுக நகரச் செயலாளர்
பா. சிவநேசன், பேரூராட்சி மன்ற தலைவர் சர்மிளா சிவநேசன், துணைத் தலைவர் தனித்தமிழ் மாறன், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவர்
க. செல்வம், துணைத் தலைவர் சிவ.செல்லையன்,பொருளாளர் சிங்கு தெரு ராஜேஷ், தலைமைஆசிரியர் மு. நாவளவன்,உதவி தலைமை ஆசிரியர் எஸ். கே. சீனிவாசன், செயற்குழு உறுப்பினர்கள் நல்லம்பூர் கிருஷ்ண மூர்த்தி, வசந்தி பாஸ்கரன்,பேரூராட்சி மன்ற உறுப்பினர் ரம்ஜான்பீவி சிவராஜ்,பள்ளியின் மேலாண்க் குழத் தலைவர் எஸ். சுமத்ரா, மற்றும் மனுநீதிசோழன் உள்பட பள்ளிபெற்றோர் ஆசிரியர் கழகத்தின்செயற்குழுஉறுப்பினர்கள்,மேலாண்மைகுழஉறுப்பினர்கள்,பள்ளிஆசிரியர்-சிரியைகள்,மாணவர்கள் மற்றும் பபெற்றோர்கள், பொது மக்கள் திரளாக கலந்து
கொண்டனர்.