கந்தர்வகோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் வட்டார வளமையத்தில் உலக இயன்முறை மருத்துவ தினம் பள்ளி ஆயத்த பயிற்சி மையத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு பிரகாஷ் தலைமை வகித்து உலக இயன்முறை மருத்துவத குறித்து பேசும் போது உடலின் இயக்கங்கள் பாதிக்கப்படும்போது, ஏற்படும் நோய்களை ஆராய்ந்தறிந்து, அந்த நோயின் நிலை அதிகமாகாமல் தடுக்கவும், உடலை மறுபடியும் இயங்க வைக்க, முற்றிலும் குணமடைய சிகிச்சை அளிக்கப்பட்டுஇயன்முறை மருத்துவர்களால் உச்சிமுதல் பாதம் வரை உள்ள அனைத்து குறைபாடுக்கும், தசை, தசை நார்கள், ஜவ்வுப் பிரச்சினை, மூட்டுத் தேய்மானம், முடக்குவாதம், முகவாதம் என பக்கவாதம் அனைத்து வலிகளையும் குறைத்து குணம் அடைய இயன்முறை மருத்துவத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று பேசினார்.

சிறப்பாசிரியர் ரம்யா அனைவரையும் வரவேற்றார். இயன்முறை மருத்துவர் சரண்யா மாணவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் குறித்து விளக்கினார். இந்நிகழ்வில் கலந்து கொண்ட இல்லம் தேடி கல்வி மையம் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரகமத்துல்லா உலக இயன் முறை மருத்துவ தினம் குறித்து பேசும்பொழுது பிசியோதெரபி எனப்படும் இந்த இயன்முறை மருத்துவத்தின் முறைகளால் ஏராளமானோர் பலனடைந்திருக்கிறார்கள்.

உடல் இயக்க செயல்பாட்டை விஞ்ஞான ரீதியாக அறிந்து உடல் இயக்க குறைபாடுகளை போக்கும் நவீன மருத்துவத்துமாக இன்று பிசியோதெரபி என்ற இயன் முறை மருத்துவம் வளர்ந்துள்ளது. இயன்முறை மருத்துவம் குறித்து விழிப்புணர்வு பொதுமக்களிடம் ஏற்படுத்தி அதன் மூலம் அனைவரும் பயன்பெற வேண்டும் என்று பேசினார்.

இந்நிகழ்வில் கணக்காளர்கள் ராஜலெட்சுமி, ராஜேஸ்வரி, பயிற்சி மைய ஆசிரியர் தீபா ,உதவியாளர் தாமரைச் செல்வி மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *