திண்டுக்கல் மாவட்டம் பழனி வ.உ.சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள காந்தி சிலை முன்பு இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கத்தின் இளம் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை குறித்து நடை பயணம் மேற்கொண்ட நிலையில் முதலாம் ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு
பழனி இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பாக இந்திய ஒற்றுமையை வலியுறுத்தி நடைபெற்ற நடைபயணம் வெற்றி பெற்றதை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.
தொடர்ந்து இந்நிகழ்வின் தலைமையாக பழனி நகர மேற்கு மண்டல தலைவர் வீரமணி முன்னிலையாக நகர தலைவர் முத்துவிஜயன், மற்றும் மண்டல துணைத் தலைவர் ஆட்டோ பிச்சைமுத்து, செயலாளர் கணேஷ், மாவட்ட இளைஞரணி துணை தலைவர் நேரு, கண்மணி மெஸ் தியாகராஜன் மற்றும் இரகுமான், ஹக்கீம், ஆறுமுகம்,சுப்பிரமணி, குழந்தைவேல்,நேதாஜி, உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு பிரச்சார வெற்றி பயண நிகழ்ச்சி நடைபெற்றன..
தொடர்ந்து கட்சி நிர்வாகிகளிடையே இராகுல் காந்தி இந்திய ஒற்றுமையை வலியுறுத்தி நடை பயணம் மேற்கொண்டு ஒரு ஆண்டு முடிவிட்ட நிலையில் தொடர்ந்து நடைபயணம் வெற்றி பெற்றதை முன்னிட்டு அனைவரும் தங்களுக்குள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
மேலும் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியை வலுவாக ஒன்றிணைத்து வெற்றி பெற செய்வதற்கு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பிரதானமாக ஒற்றுமையுடன் அனைவரும் உழைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை எடுத்துக் கூறி விழா நிகழ்ச்சி நடைபெற்றன.