நாமக்கல்
நாமக்கல் மாவட்ட அளவிலான கலைப் பண்பாட்டு திருவிழா போட்டிகள் செப்டம்பர் 7-8 கலை உற்சவம் எனப்படும் மாவட்ட அளவிலான கலைப் பண்பாட்டு திருவிழா போட்டிகள் நாமக்கல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கத்தில் செப்டம்பர் 7 வியாழக்கிழமை துவங்கியது
.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மூலம் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் படைப்பாற்றலை வளர்க்கவும் நமது பாரம்பரிய கலைகளை உயிர்ப்புடன் வைத்திருக்கவும் வாய்ப்பாட்டு இசை, கருவி இசை, நடனம், காண்கலை, நாடகம் ஆகிய ஐந்து பெருந்தலைப்புகளில் கலைப் பண்பாட்டு திருவிழா போட்டிகள் நடைபெற்ற வருகிறது.
அதன்படி 2023-24 ஆண்டிற்கான மாவட்ட அளவிலான கலை உற்சவம் போட்டிகளை நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கலையரங்கத்தில் நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ப. மகேஸ்வரி குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, உதவி மாவட்ட திட்ட அலுவலர் ஆர். பாஸ்கரன் வரவேற்புரை ஆற்றினார்.
10 பிரிவுகளில் நடைபெறும் இப்போட்டிகளில் மாவட்டத்தில் இருந்து 500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
செப்டம்பர் 8 வெள்ளிக்கிழமை இன்று காண்கலை பிரிவில் சிற்பம் செய்தல், களிமண் பொம்மை செய்தல், நாட்டுப்புற நடனம் போன்ற போட்டிகள் தொடர்ந்து நடைபெறுகிறது.
போட்டிகளில் முதல் 3 இடங்கள் பெறுபவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். அதில் முதலிடம் பெறுபவர் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றும் இன்றும் 2 நாட்கள் நடைபெறும் மாணவ மாணவிகளின் லை திறன் படைப்புகளில் பொம்மை வடிவங்களில் ஓரிக்காமி, காகித பொம்மைகள், தேங்காய் நார் பொம்மைகள் , இரு பரிமாணம் (2டி) பெயிண்டிங் ஓவியங்கள், மற்றும் களிமண்ணால் செய்யப்படும் சிலைகளான மயில், முயல், சிவன், அம்மன், பிள்ளையார், ஆஞ்சநேயர் ,யானை, மாடு ,அய்யனார் ,மதுரை வீரன் சாமி உள்ளிட்ட ஏராளமான களிமண் சிலைகளும் மாணவ மாணவிகள் கைவண்ணங்களால் உருவாக்கப்பட்டது