தச்சூரில் மாற்றுத்திறனாளிக்கு உபகரணம் : மாவட்ட கவுன்சிலர் தேவி தயாளன் ஏற்பாட்டு.
திருவள்ளூர்
தச்சூரில் மாற்றுத்திறனாளிகளு க்கு மாவட்ட கவுன்சிலர் தேவி தயாளன் ஏற்பாட்டில் சி எஸ் ஆர் நிதியில் உபகரணங்கள் வழங்கப் பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது பஞ்செட்டி ஊராட்சி தச்சூர் பகுதி சேர்ந்தவர் தேவி தயாளன் இவர் திருவள்ளூர் மாவட்ட 13 வது வார்டு மாவட்ட கவுன்சிலராக உள்ளார். இவரது பகுதியான தச்சூர் ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நேற்று சி எஸ் ஆர் நிதி மூலம் சுமார் நூற்று க்கு மேற்பட்ட மாற்றுத் திறனாளி களுக்கு மூன்று சக்கர வண்டி, காது கேளாதோர்மிஷின், வீல் சேர், உள்ளிட்ட மாற்றுத்திறனாளி உபகரணங்களை 100க்கு மேற்பட்ட வர்களுக்கு வழங்கினர்.
நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளி மாவட்ட செயலாளர் ரகுஹோத்த மன், திருவள்ளூர் மாவட்ட 13வது வார்டு மாவட்ட கவுன்சிலர் தேவி தயாளன், காங்கிரஸ் கட்சியின் மாநில விவசாய அணி செயலா ளர் தயாளன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.