கந்தர்வகோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் இல்லம் தேடி கல்வி மையத்தில் சர்வதேச எழுத்தறிவு தினம் கடைபிடிக்கப்பட்டது.
தன்னார்வலர் சுதா வரவேற்றார். இந்நிகழ்வில் கலந்து கொண்ட இல்லம்தேடி கல்வி மைய ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா சர்வதேச எழுத்தறிவு தினம் குறித்து பேசியதாவது
உலகின் மாற்றத்திற்காக எழுத்தறிவை ஊக்குவிக்க வேண்டும். நிலையான மற்றும் அமைதியான சமூகத்துக்கு அடித்தளம் அமைப்பது என்பது இந்தாண்டின் கருப்பொருள் ஆகும். இதை வலியுறுத்தி இந்தாண்டு உலக எழுத்தறிவு தினம் கொண்டாடப்படுகிறது.
நிலையான வளர்ச்சிக்கான திட்டமிடலில், சர்வதேச எழுத்தறிவு தினமும், வளர்ச்சியை கொண்டுவருவதற்கு உதவும். கல்வி, வாழ்நாள் முழுவதும் கற்றல் ஆகியவற்றின் துணையோடு நீடித்த, நிலையான, உள்ளடக்கிய மற்றும் அமைதியான சமூகத்தை உருவாக்குவதே நோக்கம் ஆகும். எழுத்தறிவு மற்றும் வளர்ச்சி ஆகியவற்றிலும் அது எதிரொலிக்கிறது என்றும் மாணவர்கள் அனைவரும் தொடர்ந்து வாசிக்க வேண்டும் என்றும் பேசினார்.